கைகளுக்கு அழகு தரும் மருதாணி
பெண்களின் அழகு சாதனப் பொருட்களில் மருதோன்றியும் ஒன்று. மருதோன்றியில் அளப்பரிய மருத்துவக் குணங்கள் உள்ளதால் தான் நம் முன்னோர்கள் அவற்றை அழகு சாதனப் பொருளாக பயன்படுத்தி வந்தனர்.
இலைகளின் சாறு தசையை இறுக்கும் தன்மை உடையவை. இலைகளின் சாறு உடலுக்கு குளிர்ச்சியைக் கொடுக்கக் கூடியது. மலர்கள் தூக்கத்தை தூண்டக் கூடியவை.
இலைகள் தோல் வியாதிகளுக்கு நோய்த் தடுப்பு மருந்தாகப் பயன்படுகின்றன. இலைச்சாறு மேல் பூச்சாகக் கொப்புளங்கள், தீக்காயங்கள் மற்றும் தோல் வியாதிக்கு உபயோகப்படுத்தப்படுகின்றன.
விரல்களுக்கு மருதாணி இட்டு வருவதால் நகக்கண்ணிலுள்ள இடுக்குகளில் படிந்துள்ள அழுக்கோடு கூடிய நுண்ணுயிர் கிருமிகள் அழிய அதிக வாய்ப்புண்டு. நகச்சுற்று என்ற கொடுமையான வலி நோய் தடுக்கப்படுகிறது. சுத்தமான தேங்காயெண்ணெயில் உலர்ந்த இலைகளைச் சேர்த்துக் காய்ச்சி தலைக்கு தேய்த்து வந்தால் மயிர் உதிர்வது தடுக்கப்படும். நரை, பூனைமயிர் உள்ளவர்கள் தேய்த்து வந்தால் கேசம் கறுப்பாகும்
கேசத் தைலத் தயாரிப்பிற்கும், வாசனைத் தைலங்கள் தயாரிப்பிற்கும் மருதாணி எண்ணெய் உபயோகமாகிறது. உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடியது. இதன் சாறு, வெயில் காலங்களில் வெயிலினால் ஏற்படும் பாதிப்புகளைத் தடுக்கும். கேசத்திற்கு குளிர்ச்சியையும், கேசப் பராமரிப்பில் கிரியா ஊக்கியாகவும் பயன்படுகிறது.
''மருதாணி போடுவதால் வெள்ளை முடி நிறமாகும். தொடர்ந்து நரைக்காது. அதோடு, முடி கொட்டுவதும் நின்று போகும். ஆனால், வெறும் மருதாணி, முடியை வறட்சியாக்கிவிடும். மருதாணியுடன் மேலும் சில அயிட்டங்களை சேர்த்தால் கூந்தல் மிருதுவாகும். சளி பிடிக்காது. சைனஸ் பிரச்னை இருப்பவர்களும் பயன்படுத்தலாம்.
மருத்துவப் பயன்கள் :
கேசம் பளபளப்பாக இருக்கும். கேசத்தின் வேர்க்கால்கள் வலுவாகி முடி உதிர்வதைக் தடுக்கும். கேசம் நீண்டு வளரத் தூண்டும். ஈரத்தன்மையைத் தக்க வைக்கும். கண்களுக்கும், உடலுக்கும் குளிர்ச்சியைக் கொடுக்கும். மன அழுத்தத்தைக் குறைக்கும். சோர்வகற்றும். பூக்கள் துயிலைத் தூண்டுவிக்கும்.
மருதோன்றி பூவை தேங்காய் எண்ணெயில் காய்ச்சி தைலமாகத் தடவ உடல் உஷ்ணம் குறையும். நல்ல உறக்கம் வரும். நீடித்த தலைவலிகள் அகலும்.
நகக் கண்ணில் புண் அல்லது நகச் சுற்று ஏற்பட்டவர்கள் மருதோன்றி இலையை அரைத்து நகத்தின் மீது பற்று போட்டால் நகக் கண்ணில் ஏற்பட்ட புண்கள் குணமாகும்.
ஊட்டச்சத்து நிறைந்த பேரிச்சம்பழம்
சாப்பிடாமல் இருப்பவர்களுக்கு விரைவில் சக்தியளிக்க கூடிய ஒரு உணவு பேரிச்சம்பழம். சாப்பிடுவதற்கு, 15 முதல் 20 நிமிடங்களுக்கு முன்னால், பேரிச்சம்பழங்கள் சிலவற்றை சாப்பிட்டால், ரத்த சர்க்கரை அளவு அதிகரித்து பசி உணர்வு குறையும். இது அதிகளவு உணவு சாப்பிடுவது மற்றும் அதனால் ஏற்படும் சோர்வில் இருந்து தடுக்கவும் உதவும்.
இந்த காரணத்தால் தான், நீரிழிவு நோயாளிகளுக்கு தாழ்நிலை சர்க்கரை ஏற்படும் போது, மூன்று பேரிச்சம்பழங்கள் வரை சாப்பிட பரிந்துரைக்கப்படுகின்றனர்.
100 கிராம் பேரிச்சம்பழத்தில், 21 கிராம் நீர்ச்சத்து, 75 கிராம் கார்போஹைட்ரேட், 0.4 கிராம் கொழுப்பு சத்து மற்றும் 2.5 கிராம் புரதச்சத்து அடங்கி உள்ளது.
தினமும் இரவில் படுக்க செல்லும் முன்னர் ஒரு டம்ளர் காய்ச்சிய பசும் பாலையும், இரண்டு பேரீட்ச்சம் பழத்தினையும் உண்டு வந்தால் உடல் நல்ல பலம்பெறும். புதிய ரத்தமும் உண்டாகும். தோல் பகுதிகள் மிருதுவாகவும், வழுவழுப்பாகவும் இருக்கும். கண் சம்மந்தமான கோளாறுகளும், நரம்பு சம்மந்தமான கோளாறுகளும் நீங்கும். தொற்று நோய் கிருமிகள் நம்மை அணுகாது. பல் சம்மந்தமான வியாதிகளும் குணமடைந்து, பல் கெட்டிப்படும்.
பேரிச்சம் பழத்தில் 15 வகை மினரல்கள் அடங்கி உள்ளன.சிலவகை கடும் நோய்களில் இருந்து தற்காத்து கொள்ள, பேரிச்சம்பழங்கள் உதவுகின்றன.இரும்பு சத்து ஆகியவை உள்ளன.
மிகவும் குறைவாக கொழுப்பு சத்து உள்ளது.
பிற பழங்களை விட அதிகமாக, பேரிச்சம்பழங்களில் தான், 3.5 சதவீதம் முதல் 5.5 சதவீதம் வரையிலான அளவு பெக்டின் நிறைந்துள்ளது. பெக்டின், ரத்தத்தில் கொழுப்பின் அளவை குறைக்க உதவுகிறது.
மஞ்சள் அழகு....
வேப்பிலை, மஞ்சள் ஆகியவற்றை தேங்காய் பாலுடன் சேர்த்து அரைத்து உடம்பில் தினசரி பூசிக் குளித்து வந்தால் உடம்பிலுள்ள அழுக்குகள் மற்றும் துர்நாற்றம் நீங்கி சருமம் ஒளிபெறும்.
மஞ்சளுடன் சந்தனமும் பன்னீரும் கலந்து பூசினால் சருமம் கவர்ச்சி அளிக்கும்.