பெரும்பாலான பெண்கள் முகத்துக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை கண்களுக்கு கொடுப்பதில்லை. இதனால் கண்களில் கருவளையம் தோன்றி விடும். ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக ஏற்படும் கருவளையத்திற்கு நிச்சயம் மருத்துவர் ஆலோசனை பெற வேண்டும். மற்ற காரணங்களால் ஏற்படும் கருவளையத்தை போக்க இதோ சில டிப்ஸ்…
# வெள்ளரி, உருளைக் கிழங்கு இரண்டையும் அரைத்து ஒரு துணியை பன்னீரால் நனைத்து அந்த துணியை கண்ணின் மீது வைத்து அதன் மேல் வெள்ளரி, உருளைக் கிழங்கு விழுதை வைத்து தூங்க கருவளையம் குறையும்.
# எலுமிச்சைச் சாறு, குளிர்ந்த பால் இரண்டையும் கலந்து பஞ்சால் நனைத்து தினமும் கண்ணின் மேல் தடவி 10 நிமிடம் ஊற வைத்து பின் முகம் கழுவினால் கருவளையம் குறையும்.
# பன்னீரை பஞ்சால் நனைத்து கண்ணின் மீது தினமும் வைத்து 10 நிமிடம் கழித்து முகம் கழுவினால் கருவளையம் குறையும்.
# விளக்கெண்ணெயை கண்ணிமையின் மேல் பகுதியிலும் உருளைக் கிழங்குச் சாறை கண்ணின் கீழ் பகுதியிலும் தினமும் தடவி வர கருவளையம் குறையும்.
# சந்தனக் கட்டையில் ஜாதிக்காயை உரசி இரவில் படுக்குமுன் கண்ணைச் சுற்றி தினமும் தடவி வர கருவளையம் குறையும்.
# விளக்கெண்ணெய், மஞ்சள் இரண்டையும் கலந்து தினமும் கண்ணை சுற்றி தடவி வர கருவளையம் குறையும்.
# பேரிச்சை பழத்தை அரைத்து வெண்ணெயுடன் கலந்து தினமும் கண்ணின் மீது தடைவி வர கரு வளையம் குறையும்.
# துளசி சாறு, புதினா சாறு, பன்னீர் மூன்றையும் கலந்து கண்ணில் தடவி வர கருவளையம் குறையும்.
# வெதுவெதுப்பான பாலில் காட்டன் துணியை நனைத்து தினமும் கண்ணில் வைத்து 10 நிமிடம் கழித்து எடுக்க கருவளையம் குறையும்.
# அன்னாசிப் பழச்சாறுடன் முல்தானிமட்டி கலந்து தினமும் முகத்தில் தடவி 15 நிமிடங்கள் ஊற வைத்து பின் முகம் கழுவினால் கண்ணில் கருவளையம் குறையும்.
# கற்றாழையின் சோற்றுப் பகுதியினை பன்னீருடன் கலந்து தினமும் கண்ணுக்கு கீழ் தடவி 10 நிமிடம் கழித்து முகம் கழுவினால் கண்களிலுள்ள கரு வளையம் குறையும்.
# வெள்ளரிக்காய், உருளைக்கிழங்கு இரண்டையும் நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ளவும். பிறகு துணியை பன்னீரில் நனைத்து கண்களின் மீது வைத்து, அதன் மேல் அரைத்த கலவையை வைத்து படுத்து தூங்க வேண்டும். இவ்வாறு 5 நாட்கள் செய்தாலே போதுமானது. கரு வளையம் இருந்த இடம் தெரியாமல் போய்விடும்.
கண்ணில் கருவளையம் நீங்க.
Salwar Kameez Neck Designs
பழச்சாறு
பழச்சாறுகள் உடல் நலத்திற்கு தீங்கை விளைவிக்கும்.
ஆய்வில் தகவல்
பழச்சாறுகளை அடிக்கடி குடிப்பதால் உடல் பருமன், ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரித்தல் உள்ளிட்ட உடல் நலக்கேடுகள் ஏற்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
பழச்சாறு அருந்துவது மற்றும் உலர் பழங்களை சாப்பிடுவதால் உடலுக்கு உண்டாகும் நன்மை, தீமைகள் குறித்து இங்கிலாந்தின் வடக்கு வேல்ஸ் பகுதியிலுள்ள பாங்கர் பல்கலைக்கழகம் ஆய்வு மேற்கொண்டது.இதன் முடிவுகள் பழச்சாறு பிரியர்களுக்கு பாதகமாக அமைந்துள்ளது.
பழச்சாறை தொடர்ந்து சாப்பிடுவதால் பற்களுக்கும் கேடு ஏற்படுவதுடன் கலோரி நிறைந்த உணவுகளை உண்ணத் தூண்டுகிறது. இதனால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கிறது. உடல் பருமன் உண்டாகிறது. உடலின் வளர்சிதை மாற்றத்தில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. புதிய பழங்களைக் கொண்டு சாறு பிழிந்தாலும் சாறில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கிறது.
அதாவது 1 டம்ளர் பழச்சாறில் 5 ஸ்பூண் அளவு சர்க்கரை உள்ளது. எனவே பழச்சாறு பருகுவது உடல் நலத்துக்கு நல்லதல்ல என ஆய்வின் முடிவுகள் கூறுகின்றன. ஒரு டம்ளர் பழச்சாறில் 4 மடங்கு தண்ணீர் கலந்து பருகினால் பாதிப்புகள் குறையும் என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அதே நேரம் பழங்களைவிட உலர் பழங்களை திண்பதால் அதிக நன்மைகள் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.