Non-Stick

நான்ஸ்டிக் பாத்திரங்கள் பாவிப்பதால் ஏற்படும் தீமைகள்.

உணவில் அதிக எண்ணெய் சேர்த்துக் கொள்ள விரும்பாதவர்கள் நான்ஸ்டிக் பாத்திரங்களை உபயோகிக்கின்றனர். இந்த பாத்திரங்களில் சமைக்க குறைந்த அளவு எண்ணெய் தான் தேவைப்படும். குறிப்பாக தயாரிக்கப்படும் உணவு பாத்திரத்தில் ஒட்டவே ஒட்டாது. இது தான் நான்ஸ்டிக்கின் சிறப்பு அம்சம்.
எண்ணையின் அளவை குறைப்பதற்காக மட்டுமின்றி நான்ஸ்டிக் பாத்திரத்தில் சமையல் செய்வது இன்றைக்கு நாகரீகமாக கருதப்பட்டாலும் அதுவே உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கிறது.நான்ஸ்டிக்கை பயன்படுத்தினால் கொழுப்புச்சத்தைக் குறைக்கலாம் என்று நினைப்பது தவறாகும்.
அந்த பாத்திரங்களின் உட்புறம் பூசப்படும் ரசாயன பொருட்கள் மற்றும் தண்ணீரை உறிஞ்சாத வாட்டர் புரூப் தயாரிக்க பயன்படும் “பேப்ரிக்”குகளும் கொழுப்பு சத்தை உணவில் அதிகரிக்கின்றன. அந்த உணவை சாப்பிடும் குழந்தைகளின் ரத்தத்தில் கலந்து கொழுப்பு சத்தை அதிகரிக்கிறது. லிபோபுரோட்டீனின் அளவை குறைக்கிறது. இதனால் குழந்தைகளின் உடல்நலம் பாதிக்கும் நிலை உருவாகிறது.

நான்ஸ்டிக் பாத்திரங்களில் உணவு பொருட்கள் ஒட்டாமல் இருக்க “பெர்புலோரோ அல்சைல்” திரவம் பூசப்படகிறது. இதன் மூலம் தான் கொழுப்புசத்து அதிகரிப்பதாக கூறப்படுகிறது.
ஆனால் நம் முன்னோர் மண்சட்டியில் தயார் செய்யும் உணவு உடலுக்கு ஆரோக்கியமானது என்பது மட்டும் முற்றிலும் உண்மை.