துளசி என்றால் எல்லோருக்கும் தெரியும். அதன் மருத்துவ குணங்கள் ஏராளம். அதற்கு ஆன்மீக மகத்துவமும் உள்ளதாக புராணங்கள் கூறுகின்றன. எல்லோர் வீட்டிலும் இருக்க வேண்டிய செடிகளில் முதன்மையான இடத்தைப் பிடித்திருப்பது துளசி செடிதான்.
துளசியின் தாயகம் இந்தியா. அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுக்கும் பரவியுள்ளது.
தெய்வீக மூலிகையும், கல்ப மூலிகையும் ஆகும். வீட்டு உபயோகம், மருந்து, வாசமுடைய பூச்சி மருந்துகள், வாசனைப் பொருட்கள். துளசியின் கசாயம் இட்டும், சூரணம் செய்தும் சாப்பிடலாம். இருமல், சளி, ஜலதோசம் மற்றும் தொற்று நீக்கி, கிருமி நாசினி, பல்வேறு வியாதிகளையும், பூச்சிகளையும் கட்டுப்படுத்தும் தடுக்கும் ஆற்றல் படைத்தது.
சளித்தொல்லை குணமாகும். ஆரம்பநிலை ஆஸ்துமா அகலும். இருமலைப்போக்கும். கல்லீரல் கோளாறுகளை நீக்கும். உடல் அசதி, சோர்வு தீரும். சருமத்தில் ஏற்படும் அலர்ஜி குணமாகும்.
துளசி நம் உடலில் வெப்பத்தை உண்டாக்கி கோழையை அகற்றி உடலின் உள்ளே இருக்கின்ற வெப்பத்தை ஆற்றக்கூடிய தன்மை உடையது. வியர்வையை அதிகமாகப் பெருக்கக் கூடிய குணமும் இதற்கு உண்டு.
துளசி இலைகள் சாப்பிட்டால் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். உடலில் உள்ள தொற்று நோய் கிருமிகளும் அடியோடு ஒழியும் என்றார்.
சர்க்கரை நோய் வந்தவர்களும் துளசி இலையை மென்று திண்ணலாம். இதனைச் செய்து வந்தால் சர்க்கரை அளவு கட்டுப்படும். மருந்து மாத்திரை மூலம் செய்ய முடியாததை இந்த அருமருந்தான துளசி செய்துவிடும்.
பேன்களுக்கு துளசி என்றால் விஷம். தலையில் துளசியைப் பரப்பி, தலையைத் துணியால் கட்டி வைத்து, இரவில் படுக்க பேன்கள் அங்கும் இங்கும் ஓடி இறக்கும்.
துளசி இலை நல்ல நரம்பு உரமாக்கியாகச் செயல்படுவதோடு, ஞாபக சக்தியையும் வளர்க்கிறது. துளசி மணி மாலை அணிவதால் அதிலிருந்து மின் அதிர்வுகள் ஏற்பட்டு நம்மை பல நோய்களிலிருந்து காக்கிறது.
நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் துளசி
3:04 AM
hasheena
Posted in
மூலிகை வைத்தியம்
Subscribe to:
Post Comments (Atom)
1 Response to "நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் துளசி"
நல்ல தகவல்கள்.
Post a Comment