அளவுக்கு மிஞ்சி நிறைய முடி உதிர்ந்து என்ன செய்வது என்று கவலைப் படுபவர்களுக்கு உதவுவதும் வெந்தயம்தான். வெந்தயத்தைத் தண்ணீரில் ஊற வைத்து வெண்ணெய் போன்று அரைத்து தலையில் தேய்த்து வைத்து அரைமணிநேரம் ஊறியதும் குளிக்க வேண்டும். ஓரிரு முறையிலேயே உடனடி பலனை எதிர்பாராமல் தொடர்ந்து சில மாதங்களுக்கு வாரம் ஓரிரு முறை வீதம் பின்பற்றவேண்டும்.
பருவ வயதில் முகத்தில் நிறைய பருக்கள் வந்து தாங்கமுடியாத எரிச்சலிருந்தால் வெந்தயத்தை அரைத்து அப்பேஸ்ட்டை அப்பி வைத்து வந்தால் எரிச்சல் அடங்குவதோடு பருக்களும் காணாமல் போய்விடும்.
பச்சை பயறுடன் வெந்தயம் சேர்த்து வெந்நீரில் குழைத்து உடல், முகம், கை, கால்களால் தடவி வர தோல் பளபளப்பாகும்.
40 வயதைக் கடந்த பெண்களுக்கு மட்டுமல்ல இளம் பெண்கள் சிலருக்கும் உதட்டில் வெடிப்பு ஏற்பட்டு ரத்தம் கசியும்.
உதடு கறுப்பானதாக மாறிவிடும். இதற்கு காரணம் உடலில் உஷ்ணம் இருப்பதுதான்.
இதைப் போக்க வெந்தயத்தை ஒரு ஸ்பூன் இரவில் ஊறவைத்து காலை எழுந்ததும் ஒரு டம்ளர் மோரில் அந்த வெந்தயத்தை போட்டு குடித்துவிடவேண்டும். இரவு நேரங்களில் வெண்ணையை உதட்டில் தடவிக் கொண்டு படுக்க வேண்டும். இப்படி தொடர்ந்து செய்து வந்தால் உதடு பழைய பொலிவுக்கு வந்து விடும்.
வெந்தயத்தை தலைக்கு தேய்த்து குளித்தால், உடல் உஷ்ணம் குறைவதுடன் பொடுகு தொல்லை நீங்கும்.
அழகு தரும் வெந்தயம்



Subscribe to:
Post Comments (Atom)
No Response to "அழகு தரும் வெந்தயம்"
Post a Comment