கணணி விளையாட்டு


இன்று கணினிப் பாவனையாளர்களில் அநேகாமானோரின் பொழுது போக்காக கணினி விளையாட்டுக்களே காணப்படுகின்றன. இங்கு ஒரு சாராரின் பொழுது போக்கு இன்னொரு சாராரின் சம்பாத்தியமாக அமைகிறது. பொழுது போக்கிற்காக கணினி விளையாட்டுக்களை வாங்கி விளையாடுவதனால் அது கணினி விளையாட்டுக்களை வடிவமைக்கும் நிறுவனங்களுக்கு வெகுவாரியான வருமானத்தை ஈட்டிக்கொடுக்கிறது. கணினி விளையாட்டுக்களைத் தயாரிக்கும் ஒரு நிறுவனம் ஹொலிவுட் திரைப்படம் தயாரிக்கும் ஒரு நிறுவனம் பெறும் வருமானத்தைவிட பன்மடங்கு அதிகமான வருமானத்தைப் பெறுவதாக ஒரு அறிக்கை குறிப்பிடுகிறது. Microsoft, Electronic Arts, Sony போன்ற கணினி நிறுவனங்களுக்கு உலகின் நாலாபக்கங்களிலிருந்தும் பணம் வந்து குவிய பிரதானமான காரணம் அவை தயாரிக்கும் கணினி விளையாட்டுக்கள் ஆகும். Sony நிறுவனத்தயாரிப்பான Play station, Microsoft இன் தயாரிப்பான X box போன்ற கணினி விளையாட்டுக்கள் இன்று உலகளவில் பலராலும் பயன்படுத்தப்படுவதாக அறியப்பட்டுள்து.

கணினி விளையாட்டுக்கு அடிமையானோரின் உடல் உற்சாகமும், உடற்பலமும் குன்றிச் செல்கிறது. அத்தோடு ஒரே இடத்திலிருந்துகொண்டு உணவையும் உட்கொள்வதால் உடல் அபரிமிதமாகப் பருத்துச்செல்கிறது. விளையாட்டு மைதானத்தில் ஓடி, பாய்ந்து, உதைத்து, விழுந்து, எழுந்து விளையாடுகின்ற கால்பந்து, கரப்பந்து, போன்ற விளையாட்டுக்களால் கிடைக்கும் உடற்பலம், உட்சாகம், சீரான இரத்த ஓட்டம், உடற் பயிற்சி என்பன வெறுமனே கணினிகளுக்கு முன்னால் பல மணிநேரங்கள் அமர்ந்து கொண்டு விரல்களை அசைப்பதனால் மாத்திரம் கிடைக்கப் போவதில்லை. மேலும் பலருடன் சேர்ந்து விளையாடுகையில் சாதகமான தகவல் பரிமாற்றமும் புரிந்துணர்வும் சமூகத்தில் விட்டுக்கொடுப்புடன் நடந்துகொள்ளும் மனப்பாங்கும் உருவாகின்றது. ஆனால் கணினி விளையாட்டின் மூலம் மனிதன் சமூகத்திலிருந்து தனிமைப்படுத்தப் படுகிறான்.

இன்னும் சொல்வதானால் தொடர்ச்சியான வீடியோ விளையாட்டினால் உடல் தசைகள் செயலிழந்து உறுப்புக்கள் முடமாக வாய்ப்புண்டு. மேலும் முதுகுத் தண்டிலும் கழுத்துப்பகுதியிலும் மூட்டு வலிகள் ஏற்படுகின்றன. அத்தோடு விளையாடும்போது ஒரே இலக்கைப் பார்த்துக் கொண்டிருப்பதனால் கடுமையான தலைவலியும் ஏற்படுகிறதென வைத்தியர்கள் கூறுகின்றனர். சிறுவர்களின் கிரகித்தலைக் கூட்டக்கூடிய மிகச்சிறந்த வழியாக கணினி விளையாட்டுக்கள் அடையாளப்படுத்தப்படுவதாக அண்மையில் செய்தியொன்று வெளியாகியது. இது ஓரளவு உண்மையாக இருப்பினும் மேற்கூறிய ஆய்வுகளுடன் ஒப்பிடுகையில் 99% ஆனவை ஆபத்தாகவே உள்ளதனால் அதிலிருந்து முற்றாகத் தவிர்ந்து கொள்ள வேண்டும்.

இன்னுமொரு திடுக்கிடச் செய்யும் செய்திதான் கணினி விளையாட்டுக்கு அடிமைப்படுவதானது போதைப்பொருளுக்கு அடிமைப்படுவதைவிட மிகவும் ஆபத்தானது என போதைப்பொருளுக்கு அடிமையானவனின் நடத்தைப் பண்புகளுடன் கணினி விளையாட்டுக்கு அடிமையானவனின் பண்புகளை ஒப்பு நோக்கி ஆய்வாளர்கள் வெளியிட்டுள்ள முடிவாகும்.

தென்கொரியாவைச் சேர்ந்த 28 வயதுடைய ஒரு இளைஞன் தொடர்ச்சியாக 50 மணித்தியாலங்கள் வீடியோ விளையாட்டுக்களில் ஈடுபட்டதனால் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்துள்ளான். இது போன்றுதான் லீபோர்பல்லில் 14 வயதுடைய சிறுவன் ஒருவன் இரத்த உறைவின் காரணமாக மரணமடைந்துள்ளான். அவன் தொடர்ச்சியாக சுமார் 10 மணித்தியாலங்கள் ஒரே நிலையில் அமர்ந்தவாறு வீடியோ விளையாட்டுக்களில் ஈடுபட்டமையாலேயே இந்நிகழ்வு நடந்துள்ளது என பின்பு அறியப்பட்டுள்ளது.

கணினிக்கு முன்னால் அமர்ந்து வேளை செய்பவர்கள் இவ்வாறான கணினியின் ஆபத்துக்களிலிருந்து தம்மைப் பாதுகாத்துக்கொள்ள சில பாதுகாப்பு நடவடிக்கைகளை ஏற்படுத்திக் கொள்ளலாம். எனினும் மனிதனை உடல் ரீதியாகவும், உளரீதியாகவும் பாதிப்படையச் செய்து முழு நேரத்தையும் குடித்துக் கொண்டிருக்கும் கணினியூயூவீடியோ விளையாட்டுக்களை விட்டும் முற்று முழுதாக ஒதுங்கவதுதான் அவற்றின் தீங்கிலிருந்து உள்ள பாதுகாப்பு முறையாகும்.

பெரும்பாலான கணினிப் பாவனையாளர்களுக்கு தலைவலி ஏற்டபடக் காரணம் கணினித்திரையிலிருந்து வெளியாகும் ‘ட்ரினனில் பொஸ்பேட்’எனும் இரசாயன ஒளிக்கதிராகும்இதனால முகத்தில்சொறி, மூச்சுத்தினறல் என்பனவும் ஏற்படுவதாகக் காண்டறியப்பட்டுள்ளது. இவ்வகையான ஒளிக்கதிர்கள் வெளியேறக்காரணம் கணினி அதிகமாக வெப்பமடைவதாகும்.

எனவே தொழிநுட்ப முன்னேற்றத்தின் உச்சத்தில் வாழ்ந்துகொண்டிருக்கும் நாம் எதனையும் தூர நோக்கோடு அணுகவேண்டும். அவற்றின் சாதக பாதகங்களை நன்கு ஆராய்ந்து எக்கும் எமது ஈமானுக்கும் உகந்ததெனின் மாத்திரம் அவற்றைப் பயன்படுத்தவேண்டும். எனவே இதுகுறித்து மேலும் சிந்தித்து இவற்றிலிருந்தும் விலகி நடப்போம்...!

No Response to "கணணி விளையாட்டு"