குங்குமப் பூ பற்றி அறிவோமா ........


குங்குமப்பூ என்றதுமே ஒருவரது மனதில் தோன்றுவது இரண்டு விஷயங்கள் ஒன்று அதன் அபார விலை மற்றொன்று குழந்தை சிவப்பாகப் பிறப்பதற்கு கர்ப்பிணிப் பெண்கள் உண்பது குங்குமப்பூவை கர்ப்பிணிப் பெண்கள் உட்கொண்டால் குழந்தை சிவப்பாகப் பிறக்கும் என்ற ஒரு கருத்து நிலவுகின்றது இதற்கு எந்த ஒரு ஆதாரமும் கிடையாது. விசேஷ சக்தியைத் தூண்டி செயல் திறனை அதிகரிப்பதால் ஒரு வேளை பிறக்கும் குழந்தை ஆரோக்கியமாகப் பிறக்கலாம் என்பது மட்டுமே உண்மை. குங்குமப்பூவை கர்ப்பிணி பெண்கள் கட்டுப்பாட்டுடன் அளவோடு பயன்படுத்த வேண்டும்.

குங்குமப்பூவில் சுமார் 150ற்கும் மேற்பட்ட எண்ணெய்கள் காணப்படுகின்றன. இவை அனைத்தும் தான் அதன் ருசி, நிறம், மணம் போன்றவற்றிற்குக்காரணம்.
குங்குமப்பூ உற்பத்தியில் முதல் இடத்தில் இருக்கும் நாடு ஸ்பெயின் ஆகும் அதனைத் தொடர்ந்து இத்தாலி, கிரீஸ், போன்ற நாடுகள் உள்ளன இந்தியா நான்காம் இடத்தில் உள்ளது இந்தியாவின் வருட உற்பத்தி உலக உற்பத்தியில் சுமார் 7 சதவிகிதம்.

குங்குமப்பூவின் பயன்கள்:
• சமையலில் பானங்கள், இனிப்பு வகைகள் போன்றவற்றில் பயன்படுத்தப்படுகின்றது.
• இந்திய, அரேபிய, ஆசிய உணவுகளில் குங்குமப்பூ இடம் பிடித்துள்ளது.

மருத்துவம்:
• உடல்
• ஆரோக்கியத்தை பேணக் கூடியது.
• நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டக்கூடியது
• வயதைக் குறைக்கக் கூடியது.
• புற்று நோயை தடுக்கக் கூடியது.
• பசியைத் தூண்டக்கூடியது.
• வாய்வை வெளியேற்றக் கூடியது.
• தலைவலியை போக்கக் கூடியது.
• நுரையீரலுக்கு வலுச் சேர்க்கக் கூடியது.
• இரணங்களை ஆற்றக் கூடியது.
• கல்லீரலை செம்மையாக செயல்படச் செய்யக் கூடியது.
• ஆண்களின் விசேஷ சக்தியை தூண்டக் கூடியது.
• வேகத்தையும் சக்தியையும் அதிகரிக்கின்றன.
• புதிதாக மணமான தம்பதியரில் குங்குமப்பூ பாதாம் சேர்ந்த பால் மிகவும் பயன்தரக் கூடியது.
• தேவைப்படுவோருக்கு தேவையான சக்தியை தரக்கூடியது.

மூக்கடைப்பு விலக…
சிறிது குங்குமப்பூவை எடுத்து சிறிது சூடன் சேர்த்து அரைத்து அதனுடன் சிறிது தேங்காய் எண்ணெய் சேர்த்து நெற்றியில் பற்று போல போட்டால் தலைவலி விலகும் மூக்கடைப்பு நீங்கும்.

கலப்படங்கள் நிறைந்துள்ள இக்காலகட்டத்தில் அதன் விலை அதிகமாக இருப்பதால் பல வாறு கலப்படம் செய்யப்பட்ட குங்குமப்பூவும் கிடைக்கின்றது. நயமான பூக்கள் மிகவும் விலையுயர்ந்ததாக இருப்பதாக கலப்படம் செய்யப்பட்ட பூவை அறிவது மிகவும் அவசியம். உண்மையான நயமான குங்குமப்பூ செயற்கையான கலப்படம் செய்தவற்றிலிருந்து மாறுபட்டது. இதனை தரம் பிரிக்க சிறிது குங்குமப்பூவை எடுத்து ஒரு டம்ளர் தண்ணீரில் போட்டால் நயமான கலப்படமில்லாத பூ மெதுவாகக் கரைத்து மின்னக் கூடிய தங்க நிறம் கொண்டதாக தண்ணீர் மாறி நல்ல மணம் தரும். ஆனால் கலப்படம் செய்யப்பட்டது உடனே கரைந்து சிவப்பு நிறமானதாக தண்ணீரை மாற்றிவிடும். மணம் இருக்காது.
நாம் குங்குமப்பூ என்று கூறும் குங்குமப்பூ ஒரு பூவின் மகரந்த கேசரமாகும் ஒரு பூவில் 3 மகரந்த கேசரம் மட்டுமே இருப்பதால் அந்த மகரந்த கேசரங்களைச் சேர்த்துத் தருவதாலேயே அதன் விலை அதிகமாக உள்ளது. அதிக விலை போகும் மூலிகைகளுள் குங்குமப்பூவும் ஒன்றாகும் அதனை வாயில் போட்டால் ஒரு வித்தியாசமான கசப்பு சுவை வரும் ஒரு வித்தியாசமான மணமும் வரும். இளம் மஞ்சள் நிறத்தை தரக்கூடியது.

No Response to "குங்குமப் பூ பற்றி அறிவோமா ........"