மஞ்சள் தூளைத் தவறாமல் சேருங்கள்!

மஞ்சள் தூள் இரத்தத்தை சுத்தப்படுத்தும் அரிய உணவு மருந்து. இதன் மூலம் குடல் கோளாறுகள் அனைத்தும் குணமாகும். குறிப்பாக வயிற்றுப் பொருமல், சீதபேதி உடனடியாகக் குணமாகும். இதனால்தான் பாலில் மஞ்சள்தூள் கலந்து அருந்துகிறார்கள். மஞ்சள் தூளைச் சமையலில் தவறாமல் சேர்ப்பது நல்லது. ஆயுர் வேதம் மற்றும் யுனானி மருந்துகளில் பண்டையச் காலத்திலிருந்தே மஞ்சள் தூள் சேர்க்கப்பட்டு வருகிறது.

ஃபோலிக் அமிலம் பெற

பள்ளி ,கல்லூரி மாணவ மாணவியர், கர்ப்பிணிகள், முப்பது வயதுக்கு மேற்பட்டோர் என அனைவருக்கும் ஃபோலிக் அமிலம் அத்தியாவசியமானது. மூளையை சுறுசுறுப்பாக்குவதில் இதற்கு பெரும்பங்குண்டு. மனநிலை பாதிப்போ, முதுமையில் ஞாபக மறதி நோயோ ஏற்படாமல் தடுக்கும் ஆற்றலுள்ளது.

ஃபோலிக் அமிலம் அதிகம் உள்ள உணவுகள்

1..பருப்பு வகைகள்

2.பீன்ஸ்

3.வெண்டைக்காய்

4.கறிவேப்பிலை

5.தண்டுக்கீரை

6.முட்டை

7.ஆட்டு ஈரல்

மூளையில் அலுமினியம் சேரக்கூடாது. ஆகையால் அலுமினிய பாத்திரங்களில் சமைக்கக்கூடாது. தினமும் பச்சை வெங்காயம் சாப்பிட்டு வந்தால் அலுமினியச் சத்து சேராது. முட்டைக்கோஸ் அதிகம் சேர்க்க வேண்டும்

தொப்பை குறைய

இன்று பலரிடம் காணப்படும் பிரச்சினை இந்த தொப்பையை எப்படி குறைப்பது... இதோ

அன்னாசிப் பழத்தை சிறு துண்டுகளாக்கி நான்கு தேக்கரண்டி ஓமத்தை பொடி செய்து அன்னாசியுடன் சேர்த்துக் கிளற வேண்டும். பின் ஒரு டம்ளர் நீர் ஊற்றி இரவிலேயே கொதிக்க வைத்து இறக்கி மூடி வைக்க வேண்டும். மறுநாள் காலையில் அதை நன்கு பிழிந்து சக்கையை நீக்கிவிட்டு சாரை வெரும் வயிற்றில் அருந்த வேண்டும். தொடர்ந்து பத்து நாட்கள் மட்டும் இதை அருந்தினால் தொந்தி கரைந்துவிடும். இதோடு யோகா, உடற்பயிற்சி, அளவான சாப்பாடு இவற்றையும் தொடர வேண்டும்.